உலகத்தின் பல்வேறு பகுதிகளில் கொடிய விஷமுள்ள தவளைகள் கடத்தப்படுவதையடுத்து விமான நிலையங்கள் கண்காணிப்பைத் தீவிரப்படுத்தியுள்ளன.
கொலம்பியாவில் உள்ள எல் டோராடோ விமான நிலையத்தில் நடத்தப்பட்ட சோதனையில் அரிதினும் அரிதான 400 அதிக விஷம் கொண்ட மஞ்சள் புள்ளி மற்றும் கருப்புப் பட்டை தவளைகள் கடத்தப்படுவது கண்டுபிடிக்கப்பட்டது.
இந்தத் தவளையின் சில துளி விஷம் ஒரே சமயத்தில் 10 நபர்களைக் கொல்லும் தன்மை கொண்டது என்பதால் விஷத்தவளைகள் கடத்தப்படுவதைத் தடுக்க ஐரோப்பிய, தென் அமெரிக்க நாடுகளில் உள்ள விமான நிலையங்கள் கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ளன.