சீனாவில் இருந்து நிலவுக்கு அனுப்பப்பட்ட விண்கலம் அங்கு எடுக்கப்பட்ட மண் மற்றும் பாறை துகள் மாதிரிகளுடன் வெற்றிகரமாக பூமிக்கு திரும்பியுள்ளது.
கடந்த 40 ஆண்டுகாலத்தில் முதன்முறையாக, நிலவிலிருந்து மாதிரிகளை சேகரித்துக் கொண்டு, விண்கலம் ஒன்று பத்திரமாக புவிக்கு வந்துள்ளது. இந்த சீன விண்கலம், Long March-5 என்ற ராக்கெட் மூலம், கடந்த மாதம் 24ஆம் தேதி, நிலவுக்கு அனுப்பப்பட்டது. "சாங்-இ-5" என்று பெயரிடப்பட்ட இந்த விண்கலத்தில் இருந்து பிரிந்த தரையிறங்கு கலமான லேண்டர் அசெண்டர், கடந்த ஒன்றாம் தேதி நிலவில் பத்திரமாக தரை இறங்கியது.
அங்கு ஏற்கனவே திட்டமிட்டபடி கற்கள், பாறை துகள்கள், மண் மாதிரிகள் போன்றவற்றை சேகரித்தது. "சாங்-இ-5", நிலவின் வடமேற்குப் பகுதியில், மூன்ஸ் ரூம்கெர் (Mons Rumker) என்கிற எரிமலைப் பகுதியைத் தான் குறி வைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.