அமெரிக்காவில் முதலையின் வால் அருகே விழுந்த கோல்ப் பந்தினை இளைஞர் ஒருவர் உயிரைப் பணயம் வைத்து எடுத்த வீடியோ வெளியாகி உள்ளது.
புளோரிடாவில் உள்ள கேப் கோரல் என்ற இடத்தில் இரு சகோதரர்கள் கோல்ப் விளையாடிக் கொண்டிருந்தனர்.
அப்போது அடிக்கப்பட்ட பந்து குளக்கரையில் படுத்திருந்த முதலையின் வால் பகுதியில் விழுந்தது. இதனைக் கண்ட கெய்ல் டாவன்ஸ் என்ற இளைஞர் தனது உயிரைப் பணயம் வைத்து அதனை எடுத்தார்.