திங்கள்கிழமை அமெரிக்காவில் கொரோனா தடுப்பூசி போடும் பணி துவங்கியது. முதன்முதலாக நியூ யார்க் லாங் ஐலண்ட் யூத மருத்து மையத்தின் ஐசியூபிரிவு நர்சான சான்ட்ரா லின்ட்சே என்பவருக்கு காலை 9 .20 மணி அளவில் தடுப்பூசி போட்டப்பட்டது.
அதைத் தொடர்ந்து அமெரிக்காவின் 50 மாநிலங்கள் மற்றும் டிஸ்ட்ரிக்ட் கொலம்பியாவில் உள்ள மருத்துவப் பணியாளர்களுக்கு தடுப்பூசி போடும் பணி துவங்கியது. மேரிலாண்டில் அமெரிக்க பாதுகாப்பு அமைச்சர் பொறுப்பை வகிக்கும் கிறிஸ்டோபர் மில்லர் தடுப்பூசியை போட்டுக் கொண்டார்.
ஃபைசர் மற்றும் பயோன்டெக் நிறுவனங்கள் சேர்ந்து தயாரித்துள்ள கொரோனா தடுப்பூசிக்கு இரு தினங்களுக்கு முன்னர் அமெரிக்க மருந்து கட்டுப்பாட்டுத் துறை அவசரகால பயன்பாட்டுக்கான ஒப்புதலை வழங்கியது. அதைத் தொடர்ந்து, மிச்சிகனில் உள்ள பைசரின் கிட்டங்கியில் இருந்து டிரக்குளில் தடுப்பூசி அமெரிக்கா முழுமைக்கும் எடுத்துச் செல்லப்பட்டது.