ஸ்வீடன் நாட்டில் நடப்பாண்டுக்கான ஐஸ் ஹோட்டல் கட்டுமானப் பணிகள் வேகமாக நடந்து வருகின்றன.
1989 முதல் ஒவ்வொரு ஆண்டும், டோர்ன் ஆற்றின் கரையோரத்தில் ஜுக்காஸ்ஜார்வி கிராமத்தில் பனி மற்றும் பனிக்கட்டிகளைப் பயன்படுத்தி ஐஸ்ஹோட்டல் நடப்பாண்டும் கட்டப்பட்டு வருகிறது.
வழக்கமான அறைகளுடன் கூடுதலாக 6 சூட் அறைகளும் தற்போது நிர்மாணிக்கப்பட்டு வருகின்றன. இந்த அறைகள் உருகும் வரை மட்டுமே பயன்பாட்டில் இருக்கும்.
தற்போது கட்டப்பட்டு வரும் ஹோட்டலின் படங்கள் வெளியாகி உள்ளன. அடுத்த 4 மாதங்கள் மட்டுமே பயன்பாட்டில் இருக்கும் இந்த ஹோட்டலுக்குள் ஏராளமான பனிச்சிற்பங்களும் இடம் பெற்றுள்ளன.