அமெரிக்காவின் கிளீவ்லேண்டை சேர்ந்த பேஸ்பால் அணி, தங்கள் அணியின் பெயரை தொடர்ந்து வரும் ”இந்தியன்ஸ்” என்ற புனைபெயரை நீக்கவுள்ளது. கடந்த 105 வருடங்களாக ”கிளீவ்லேண்ட் இந்தியன்ஸ்” என்ற பெயரை அந்த அணி பயன்படுத்தி வருகிறது.
இந்நிலையில், இதுபோன்ற குறிப்பிட்ட நாட்டின் பெயரையோ, சமூகத்தின் பெயரையோ பயன்படுத்துவது இனவேற்றுமையை உருவாக்கும் வகையிலும், இனவெறியை தூண்டும் வகையிலும் உள்ளதாக பலர் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் அணியின் பெயரை மாற்றுவதற்கு முடிவெடுக்கப்பட்டுள்ளது. ஆனால், இந்த முடிவுக்கு அதிருப்தி தெரிவித்து அதிபர் டிரம்ப் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.