ஆஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் மாகாணத்தில் பெய்த தொடர் கன மழையால், ஏராளமான ஏரிகள் நிரம்பி வழிகின்றன.
இதனால், மக்கள் வீடுகளுக்குள் வெள்ள நீர் புகாமல் தடுக்க மணல் மூட்டைகளை அடுக்கி வருகின்றனர்.
கொரோனா ஊரடங்கால் பல மாதங்களுக்கு பின் மாகாணங்களுக்கு இடையே போக்குவரத்து துவக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளதால், மக்கள் வீடுகளில் முடங்கி உள்ளனர்.