லாஸ் ஏஞ்சலசில் கொரோனாவுக்கு பலியாவோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது என அந்த நகரத்தின் மேயர் எரிக் கார்செட்டி எச்சரிக்கை மணி அடித்துள்ளார்.
லாஸ் ஏஞ்சலஸ் மெட்ரோபொலிட்டன் ஏரியாவில் 20 ல் ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ள நிலையில், இந்த வாரம் ஒவ்வொரு 20 நிமிடத்திலும் ஒருவர் கொரோனாவுக்கு பலியாகி வருவதாக டுவிட் ஒன்றில் அவர் தெரிவித்துள்ளார்.
கொரோனா சிகிச்சைக்கான அவசர வார்டு படுக்கைகளுக்கு தட்டுப்பாடு எற்பட்டுள்ளதால் அவசர நடவடிக்கை எடுக்க வேண்டும் என மற்றோர் டுவிட்டில் அவர் குறிப்பிட்டுள்ளார். லாஸ் ஏஞ்சலசில் அமெரிக்காவிலேயே அதிகமாக கொரோனா தொற்று எண்ணிக்கையாக, 5 லட்சத்தை கடந்துள்ளது.