சாம்சங் நிறுவனம் சீனாவில் உள்ள அதன் செல்போன், டிஸ்பிளே தயாரிப்பு அலகை நொய்டாவுக்கு மாற்றும் திட்டத்தில் நாலாயிரத்து 825 கோடி ரூபாய் முதலீடு செய்ய உள்ளது.
கொரோனா சூழலில் சீனாவில் இருந்து வெளியேறும் தொழில் நிறுவனங்களை இந்தியா ஈர்த்து வருகிறது. அதன் ஒருபகுதியாக சாம்சங் நிறுவனம் சீனாவில் உள்ள செல்போன், டிஸ்பிளே தயாரிப்பு அலகை டெல்லி அருகே உள்ள நொய்டாவுக்கு மாற்ற உள்ளது.
இந்தத் தொழிற்சாலை தொடங்குவதால் 510 பேருக்கு நேரடி வேலைவாய்ப்பு கிடைக்கும்.
தொழிற்சாலைக்குத் தேவையான நிலத்தைப் பதிவு செய்ய முத்திரைக் கட்டண விலக்கு அளிப்பதாகவும், ஐந்தாண்டுகளுக்கான ஊக்கச் சலுகைகளுக்கு 250 கோடி ரூபாய் ஒதுக்குவதாகவும் உத்தரப்பிரதேச அரசு அறிவித்துள்ளது.
மின்னணுப் பொருட்கள் தயாரிப்புக்காக மத்திய அரசிடமிருந்து 460 கோடி ரூபாய் ஊக்கச் சலுகைகளும் சாம்சங் நிறுவனத்துக்குக் கிடைக்கும்.