அமெரிக்க அரசு மாடர்னா நிறுவனத்திடம் இருந்து கூடுதலாக 10 கோடி முறை செலுத்தும் அளவுக்குக் கொரோனா தடுப்பு மருந்தை வாங்க உடன்பாடு செய்துள்ளது.
மாடர்னா நிறுவனம் mRNA-1273 என்னும் பெயரில் கொரோனா தடுப்பு மருந்தைத் தயாரித்துள்ளது. பத்துக்கோடி முறை செலுத்தும் அளவிலான மருந்தை இந்த நிறுவனத்திடம் இருந்து கொள்முதல் செய்ய அமெரிக்க அரசு ஏற்கெனவே உடன்பாடு செய்துள்ளது.
முதலில் கொடுத்த கொள்முதல் ஆணைப்படி 10 கோடித் தடுப்பு மருந்துகள் அடுத்த ஆண்டின் முதல் காலாண்டிலும், இரண்டாவது செய்துள்ள உடன்பாட்டின்படி 10 கோடித் தடுப்பு மருந்துகள் இரண்டாம் காலாண்டிலும் கிடைக்கும் என அமெரிக்க நலவாழ்வுத்துறை தெரிவித்துள்ளது.