ஆப்பிரிக்க நாடான கென்யாவில் வனப்பகுதிக்குச் சென்ற சுற்றுலா பயணிகளை ஒட்டக் சிவிங்கி ஓட ஓட விரட்டியது.
மாசாய் மரா வனப்பகுதிக்குச் சென்ற வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் அங்கு நின்றிருந்த ஒட்டகச் சிவிங்கியை படம் பிடித்தனர். அப்போது திடீரென கோபம் கொண்ட அந்த விலங்கு வாகனத்தில் சென்றவர்களை விரட்டியது.
தொடர்ந்து வேகமாகச் சென்ற ஜீப்பை முந்திச் சென்ற ஒட்டகச் சிவிங்கி அதனை எதிர்த்து நின்றது. இதனையறிந்த வாகன ஓட்டுநர் ஜீப்பை பின்னோக்கிச் செலுத்த அப்போதும் விடாமல் விரட்டிச் சென்று, பின்னர் வேறிடம் சென்றது.