கிறிஸ்துமசை முன்னிட்டு வாடிகன்சிட்டியில் உள்ள செயிண்ட் பீட்டர்ஸ் சதுக்கத்தில் அதிகாரப்பூர்வமாக கிறிஸ்துமஸ் மரம் ஒன்று இயற்கை காட்சிகளுடன் நடப்பட்டது.
பொதுவாக இந்த நிகழ்ச்சியின் போது அதிகளவு மக்கள் கூடுவார்கள். ஆனால் தற்போது கொரோனா காரணமாக மிக குறைந்த அளவிலேயே இந்த நிகழ்ச்சியில் மக்கள் பங்கேற்றனர்.
மேலும் நிகழ்ச்சியும் ஊரடங்கு காரணமாக வழக்கமான மணி நேரத்திற்கு அல்லாமல் 2 மணி நேரத்திற்கு முன்பாகவே துவங்கி நடைபெற்றது. வண்ண மின் விளக்குகளுடன் காணப்பட்ட அந்த கிறிஸ்துமஸ் மரம் காண்பவர் மனதை கொள்ளை கொள்வதாய் இருந்தது.