ஃபைசர் கொரோனா தடுப்பூசியின் அவசரகால பயன்பாட்டுக்கு அமெரிக்க அரசு அனுமதி வழங்கியது.
அடுத்த 24 மணி நேரத்திற்குள் தடுப்பூசி போடும் பணி துவங்கும் என அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார். அமெரிக்கர்கள் அனைவருக்கும் தடுப்பூசி இலவசம் என்றும் அவர் அறிவித்துள்ளார்.
கொரோனாவின் பிடியில் சிக்கி சுமார் 3 லட்சம் பேரை பறிகொடுத்த அமெரிக்காவுக்கு இந்த தருணம் ஒரு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
ஃபைசரின் தடுப்பூசிக்கு முதன்முதலாக பிரிட்டன் ஒப்புதல் வழங்கியது. அதைத் தொடர்ந்து, பஹ்ரைன், கனடா, சவூதி அரேபியா, மெக்சிகோ ஆகிய நாடுகளும் ஒப்புதல் வழங்கின.