டெக்ஸாஸ் மாகாணத்தில் தேர்தலில் முறைகேடு நடந்திருப்பதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் தொடுத்த வழக்கை அந்நாட்டு உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
இதுகுறித்து அம்மாகாணத்தின் அட்டர்னி ஜெனரல் கென் பாக்ஸ்டன் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை உச்ச நீதிமன்றம் நிராகரித்தது.
முன்னதாக பென்சில்வேனியா, மிச்சிகன், ஜார்ஜியா மற்றும் விஸ்கான்சின் உள்ளிட்ட பகுதிகளில் ஜோ பைடனின் வெற்றியை எதிர்த்தும் டிரம்ப் தொடுத்த வழக்குகள் தள்ளுபடியானது குறிப்பிடத்தக்கது.