ரஷ்யாவில், 3 நாட்களாக மரத்தில் தவித்த ரக்கூனை தீயணைப்பு வீரர்கள் மீட்டனர். மாஸ்கோ நகர பூங்காவில், உறையும் பனியில் 3 நாட்களாக நடுங்கி கொண்டிருந்த ரக்கூனை கீழே வரவழைப்பதற்கு அப்பகுதி மக்கள் எடுத்த முயற்சிகள் தோல்வியில் முடிந்தன.
அப்போது, அவ்வழியாக வந்த தீயணைப்பு வீரர்கள், ரக்கூன் இறங்குவதற்கு ஏதுவாக நீண்ட கம்பை அதன் அருகில் வைத்தனர். கம்பை பிடித்தவாறு சறுக்கி வந்த ரக்கூன், கீழே ஏராளமானோர் இருந்ததால், அருகில் இருந்த வனப்பகுதிக்குள் தலை தெறிக்க ஓடியது.