கொரோனா பெருந்தொற்றால் 2020ஆம் ஆண்டில் உலகில் கார்பன் டை ஆக்சைடு வெளிப்பாடு 7 விழுக்காடு குறைந்துள்ளது.
கடந்த ஆண்டு மூவாயிரத்து 640 கோடி டன் கார்பன் டை ஆக்சைடு வளிமண்டலத்தில் கலந்ததாகவும், இந்த ஆண்டு கொரோனா பெருந்தொற்றால் மூவாயிரத்து நானூறு கோடி டன்னாகக் குறைந்துள்ளதாகவும் குளோபல் கார்பன் புராஜக்ட் அமைப்பு தெரிவித்துள்ளது.
கொரோனா பெருந்தொற்றுக் காலத்தில் மக்கள் வீட்டிலேயே தங்கியிருந்ததும், கார் விமானம் ஆகியவற்றில் பயணம் செய்வது குறைந்ததுமே இதற்குக் காரணம் எனக் குறிப்பிட்டுள்ளது.