டைம் பத்திரிகையின் 2020ம் ஆண்டுக்கான சிறந்த நபராக அமெரிக்க அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ள ஜோ பைடனும், துணை அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ள கமலா ஹாரிசும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
1927ம் ஆண்டு முதல் செய்திகளில் அதிகம் பேசபடுவோரை தேர்வு செய்து, டைம் பத்திரிகை விருது அளிக்கிறது. அண்மையில் நடைபெற்ற அதிபர் தேர்தலில் ஜோ பைடனும், துணை அதிபர் தேர்தலில் தமிழகத்தை பூர்வீகமாக கொண்ட கமலா ஹாரிசும் வெற்றி பெற்றனர்.
விரைவில் 2 பேரும் பதவியேற்கவுள்ள நிலையில், சிறந்த நபராக 2 பேரும் தேர்வு செய்யப்பட்டிருப்பதாக டைம் பத்திரிகை தெரிவித்துள்ளது.