ஆஸ்திரேலியாவில் கொரோனா தடுப்பூசி சோதனையின்போது, எச்.ஐ.வி. பாசிடிவ் என போலியான முடிவுகள் காண்பித்ததால் பரிசோதனை நிறுத்தப்பட்டுள்ளது.
குயின்ஸ்லாந்து பல்கலைக்கழகம் மற்றும் சிஎஸ்எல் நிறுவனம் இணைந்து தயாரித்துள்ள தடுப்பூசியின் முதற்கட்ட சோதனை 216 பேரிடம் நடத்தப்பட்டது. இந்த தடுப்பு மருந்தில் பயன்படுத்தப்பட்ட ஆண்டிபாடிஸ், எச்.ஐ.வி. வைரஸ் நோயறிதலில் தோன்றும் விளைவுகளை ஏற்படுத்தியதால் 4ல் ஒருவருக்கு எச்.ஐ.வி. பாசிடிவ் என போலியான முடிவுகளைக் காட்டியது.
இதனால் 2வது மற்றும் 3வது கட்ட சோதனைகளை உடனடியாக நிறுத்தப்பட்டுள்ளதாக பிரதமர் ஸ்காட் மாரிஸன் தெரிவித்துள்ளார்.