அமெரிக்காவின் சமரச முயற்சியால், இஸ்ரேல்- மொரோக்கோ நாடுகள் இடையே உறவுகளை மேம்படுத்த உடன்படிக்கை எட்டப்பட்டுள்ளது.
அதிபர் டிரம்ப்பின் முயற்சியால் அரபு நாடுகளுடன் இஸ்ரேல் சமரச முயற்சியில் இறங்கியுள்ளது. இந்த வகையில் நான்காவது அரபு நாடாக மோரோக்கோ உடன்படிக்கைக்கு இசைந்துள்ளது. கடந்த நான்கு மாதங்களாக நடைபெற்ற சமரசப் பேச்சுகளுக்கு பின்னர் இந்த முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.
மொரோக்கோ மன்னர் நான்காவது முகமதுவுடன் தொலைபேசியில் டிரம்ப் பேச்சு நடத்தியதை அடுத்து, நேற்று உடன்படிக்கைக்கு மன்னர் ஒப்புக் கொண்டார். வெளிநாட்டுக் கொள்கையில் டிரம்ப் மேற்கொண்ட மாற்றத்தையடுத்து, சஹாராவின் மேற்குப் பகுதியை மொரோக்கோவுக்கு சொந்தம் என்பதை அமெரிக்கா அங்கீகாரம் செய்தது.