ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தின் ஸ்டார்ஷிப் விண்கலத்தின் புரோட்டோடைப் பூமிக்கு திரும்பியபோது வெடித்துச் சிதறினாலும், சோதனை ஓட்டத்தில் வெற்றி பெற்றதாக அந்நிறுவன தலைவர் எலான் மஸ்க் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பான ட்விட்டர் பதிவில், விண்கலத்தில் இருந்து 3 எஞ்சின்களும் ஒன்றன் பின் ஒன்றாக செயலிழந்ததால், தரையிறங்கும் போது வேகம் அதிகரித்து விண்கலம் வெடித்து சிதறியதாக குறிப்பிட்டுள்ளார். அதேசமயம் இந்த சோதனை ஓட்டத்தில், தங்களுக்கான அனைத்து தரவுகளும் வெற்றிகரமாக சேகரிக்கப்பட்டு உள்ளதாகவும் எலான் மஸ்க் தெரிவித்துள்ளார்.
SN8 எனப்படும் செவ்வாய் கிரகத்திற்கு மனிதர்களை அனுப்பவதற்கான விண்கலத்தின் இந்த மாதிரியை, 40 ஆயிரம் அடி உயரத்திற்கு செலுத்த ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. ஆனால் நேற்றைய சோதனை ஓட்டத்தின் போது இந்த விண்கலம் எவ்வளவு தூரம் பயணித்தது என்ற தகவல் வெளியாகவில்லை. சோதனை ஓட்டங்களுக்குப் பிறகான இறுதிகட்ட விண்கல வடிவமைப்பில், 6 எஞ்சின்கள் இடம்பெறும் எனவும் கூறப்படுகிறது.