சீனாவின் விமானப் போக்குவரத்துத் துறை வெளியிட்டுள்ள புதிய வழிகாட்டலில் விமானப் பணியாளர்கள் டையபர்கள் அணியும்படியும் கழிவறையைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கொரோனா பரவல் காரணமாக உலகம் முழுவதும் உள்ள விமான நிறுவனங்கள் பயணிகளின் பாதுகாப்பு குறித்து பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றன. ஆனால் டையபர் அணியச் சொல்லும் இந்த புதிய கெடுபிடி பலரது புருவங்களை உயரச் செய்துள்ளது.
கடந்த ஆகஸ்ட் மாதம் தென்கொரியாவுக்கு இத்தாலியில் இருந்து வந்த பெண் பயணி ஒருவர் தாம் அணிந்திருந்த என்.95 முகக்கவசத்தை அணியாத ஒரே இடம் கழிவறைதான் என்றும் கழிவறை சென்ற போதுதான் அவருக்குத் தொற்று பரவியதாகவும் கூறப்படுகிறது.