உலகம் முழுவதும் கொரோனா நோய்த்தொற்று பரவலைக் கட்டுப்படுத்தும் பணிகளுக்காக, கூடுதலாக சுமார் 1842 கோடி ரூபாயை பில்கேட்ஸ் அண்டு மெலிண்டா அறக்கட்டளை நன்கொடையாக அளித்துள்ளது.
இதுகுறித்து மைக்ரோசாஃப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் உலகின் பல்வேறு நாடுகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் கொரோனா தடுப்புப் பணிகளில் உதவுவதற்காக, மேலும் 25 கோடி டாலர் நன்கொடை அளிக்கப்படவுள்ளதாக தெரிவித்துள்ளார்.
இந்த நன்கொடையின் ஒரு பகுதி, பொருளாதாரத்தில் பின்தங்கிய ஆப்பிரிக்க நாடுகளில் கொரோனா தடுப்பூசி விநியோகிப்பதற்குப் பயன்படுத்தப்படும் என்று அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.