சீனாவில் அருவி போல் ஆர்ப்பரிக்கும் மேகக் கூட்டங்களை சுற்றுலா பயணிகள் மெய் மறந்து ரசித்தனர்.
ஜியாங்சி மாகாணத்தில் உள்ள மலை முகடுகளில், நீர்வீழ்ச்சி கொட்டுவது போல் மேகக் கூட்டங்கள் தரை இறங்கி வருகின்றன. கடும் குளிரையும் பொருட்படுத்தாமல், இந்தக் கண்கொள்ளாக் காட்சியை சுற்றுலா பயணிகள் படம் பிடித்தனர்.
மழை பெய்த உடன், வளிமண்டலத்தில் காற்றின் தன்மை மாறுபடாமல் இருந்தால் இது போன்ற அபூர்வ நிகழ்வு ஏற்படும் என வானிலை ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.