அல்பேனியாவில் கொரோனா விதிமுறைகளை மீறியதாக இளைஞர் ஒருவர் போலீசாரால் கொல்லப்பட்டதை கண்டித்து நூற்றுக்கணக்கானோர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இளைஞர் தனது கையில் ஆயுதம் ஏந்தியிருந்ததாக போலீசார் குற்றஞ்சாட்டிய நிலையில், விசாரணையின்போது இளைஞரிடம் எந்த ஆயுதமும் இல்லை என்பதை போலீசார் ஒப்புக்கொண்டனர்.
இதனிடையே இளைஞரின் மரணத்திற்கு நீதி கோரி உள்துறை அமைச்சகம் முன்பு கூடிய போராட்டக்காரர்கள், போலீசார் மீது கற்களை வீசி எறிந்து கலவரத்தில் ஈடுபட்டனர்.