அமெரிக்காவில் தொடரப்பட்டுள்ள பல வழக்குகள் காரணமாக, வாட்ஸ்ஆப், இன்ஸ்டாகிராம் ஆகியவற்றை விற்கும் நிலைக்கு ஃபேஸ்புக் நிறுவனம் தள்ளப்படலாம் என கூறப்படுகிறது.
போட்டி நிறுவனங்களை ஒழிக்கும் திட்டத்துடன் அவற்றை வாங்குதல் அல்லது ஒழித்தல் போன்ற நடவடிக்கைகளில் ஃபேஸ்புக் ஈடுபடுவதாக, அமெரிக்க தேசிய வர்த்தக ஆணையமும், பல மாநிலங்களும் வழக்கு தொடுத்துள்ளன.
இதே போன்ற வழக்கு கூகுளின் தாய் நிறுவனமான ஆல்பபெட் மீதும் இந்த ஆண்டு தொடரப்பட்டது குறிப்பிடத்தக்கது. ஃபேஸ்புக் நிறுவனம் 2012 ல் 7400 கோடி ரூபாய்க்கு இன்ஸ்டாகிராமையும், 2014 ல் வாட்ஸ்ஆப்பை ஒரு லட்சத்து 40 ஆயிரம் கோடி ரூபாய்க்கும் விலைக்கு வாங்கியது.