கொரோனா தடுப்புக்காக ஃபைஸர் நிறுவனத்தின் தடுப்பூசி போட்டவர்களுக்கு ஒவ்வாமை ஏற்பட்டதைத் தொடர்ந்து பீதியடையத் தேவையில்லை என இங்கிலாந்து அரசு தெரிவித்துள்ளது.
லண்டனில் உள்ள மருந்துகள் மற்றும் சுகாதார தயாரிப்புகள் ஒழுங்குமுறை நிறுவனம் விடுத்துள்ள அறிக்கையில், ஏற்கனவே ஒவ்வாமை உள்ளவர்கள் தடுப்பூசி எடுத்துக் கொள்ளத் தேவையில்லை என்று குறிப்பிட்டுள்ளது.
தடுப்பூசி போடுவதால், ஊசி போடப்பட்ட இடத்தில் காயத்துடன் கூடிய வலி, சோர்வு, தசை மற்றும் மூட்டுக்களில் வலி, உடல் குளிர்ந்து போதல், காய்ச்சல் மற்றும் தலைவலி போன்ற பின்விளைவுகள் வெகு சாதாரணமாக ஏற்படலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் ஊசி போட்ட இடத்தில் வீக்கம், குறிப்பிட்ட இடம் சிவந்து போதல் ஆகியவை சாதரணமாகவும், அதிகப்படியாக நெறி கட்டுதல் போன்றவை அசாதாரணமாக நிகழவும் வாய்ப்பிருப்பதாகவும் அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.