ஸ்பெயின் நாட்டில் உள்ள விலங்கியல் பூங்காவில் 4 சிங்கங்களுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
பார்சிலோனாவில் உள்ள விலங்கியல் பூங்காவில் வளர்க்கப்பட்டு வரும் ஸாலா, நிமா, ரன்ரன் என்ற 3 பெண் சிங்கங்களுக்கும் கியூம்பே என்ற ஆண் சிங்கத்திற்கு உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்தது.
இதையடுத்து வனத்துறை மருத்துவர்கள் அவற்றைப் பரிசோதித்த போது சிங்கங்களுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. இதையடுத்து, பூங்கா ஊழியர்களுக்கு நடத்தப்பட்ட சோதனையில் விலங்குக் காப்பாளர்கள் இருவர் மூலம் சிங்கங்களுக்கு கொரோனா பரவியது கண்டுபிடிக்கப்பட்டது.