கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களிடம் நோயின் தீவிரத்தை குறைத்தாலும், ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் தடுப்பூசி கொரோனா பரவலை ஓரளவுக்கே தடுக்கும் என கூறப்படுகிறது.
அறிகுறி இல்லாத கொரோனா நோயாளிகளுக்கு இந்த தடுப்பூசியை போட்டு நடத்தப்பட்ட சோதனையில் 27 சதவிகிதம் என்ற அளவுக்கு மட்டுமே தொற்றை குறைப்பது கண்டுபிடிக்கப்பட்டதாக தி லான்செட் மருத்துவ இதழ் தெரிவித்துள்ளது.
இதனால் அறிகுறி உள்ளவர்களிடம் 70 சதவிகிதம் அளவிற்கு இந்த தடுப்பூசி தொற்றை தடுக்கும் என்ற தடுப்பூசி தயாரிப்பாளரின் தகவல் கேள்விக்குறியாகி உள்ளது.
அதே போன்று பிரிட்டனில் போடப்பட்டு வரும் பைசரின் தடுப்பூசியும் தொற்றை தடுப்பதை விடவும், நோயின் தீவிரத்தை குறைப்பதில் உதவிகரமாக இருக்கும் என அமெரிக்காவின் மருந்து கட்டுப்பாட்டுத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.