எலக்ட்ரிக் கார் உற்பத்தி நிறுவனமான டெஸ்லா, தனியார் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான ஸ்பேஸ் எக்ஸ் அலுவலகங்களை, கலிபோர்னியாவிலிருந்து, டெக்சஸ் மாகாணத்திற்கு மாற்ற முடிவெடுத்திருப்பதாக, அமெரிக்க தொழிலதிபர் எலன் மஸ்க் அறிவித்திருக்கிறார்.
மேலும், டெக்சஸ் மாநிலத்தில், மிகப்பெரிய டெஸ்லா, எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலையையும் நிறுவ உள்ளதாகவும், எலன் மஸ்க் கூறியிருக்கிறார். அமெரிக்காவின் சிலிக்கான் பள்ளத்தாக்கு என்றழைக்கப்படும் கலிபோர்னியாவில், இனியும், தனது பொன்னான நேரத்தை பயன்படுத்துவதற்கான தேவை இல்லை என்று எலன் மஸ்க் கூறியிருக்கிறார்.
கலிபோர்னியாவில் அதிக வரி வசூலிக்கப்படுவதால், டெக்சசில், ஏராளமான வரிச்சலுகைகள் இருப்பதன் காரணமாகவும், தனது அலுவலகங்களை இடமாற்றம் செய்ய எலன் மஸ்க் முடிவெடுத்திருப்பதாகவும் சொல்லப்படுகிறது.