டென்மார்க் நாட்டில் கொரோனா அச்சத்திற்கு மத்தியிலும் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள் களைகட்டி உள்ளன.
அங்கு அடுத்த மாதம் 3ந்தேதி வரை கொரோனா கட்டுப்பாடுகள் அமலில் உள்ளன. ஆனால் இந்த நடவடிக்கைகள் கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்திற்கு சிறிதும் பாதிப்பை ஏற்படுத்தவில்லை.
அங்குள்ள ஆல்பர்க் மிருக காட்சி சாலையில் அமைக்கப்பட்டுள்ள மிகப் பெரிய கண்ணாடி பந்தில் சான்டாகிளாஸ் அமர்ந்தபடி அங்கு வருபவர்களுக்கு கிறிஸ்துமஸ் வாழ்த்து தெரிவித்தார்.
வானில் அன்பை தெரிவிக்கும் வகையில் பெரிய இதய வடிவிலான பலூன் ஒன்று வண்ண ஒளியுடன் பறந்தபடி இருந்தது.
டைவோலி கார்டனில் 10 லட்சத்திற்கும் மேற்பட்ட வண்ண பல்புகள் உதவியுடன் கண்ணை கவரும் வகையில் கிறிஸ்துமஸ் மரம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.