அமெரிக்க புதிய அதிபராக விரைவில் பதவியேற்க இருக்கும் ஜோ பைடன், பாதுகாப்பு அமைச்சர் பதவிக்கு கருப்பினத்தவரான ஓய்வு பெற்ற முன்னாள் ராணுவ ஜெனரல் லாயட் ஆஸ்டினை தேர்வு செய்திருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
புதிய பாதுகாப்பு அமைச்சர் பெயரை வெள்ளிக்கிழமை அறிவிக்க இருப்பதாக ஜோ பைடன் ஏற்கெனவே தெரிவித்திருந்தார். இந்நிலையில், லாயட் ஆஸ்டினை அவர் தேர்வு செய்திருப்பதாக பொலிடிகோ (Politico) பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
ஒபாமா அதிபராக பதவி வகித்த காலத்தில், மத்திய கிழக்கில் இருந்த அமெரிக்க ராணுவத்துக்கு லாயட் ஆஸ்டின் தலைமை வகித்தது குறிப்பிடத்தக்கது.