பிலிப்பைன்ஸ் நாட்டில் உணவு நிறுவனம் ஒன்று 70 ஆயிரம் கேன்களை கொண்டு கிறிஸ்துமஸ் மரம் ஒன்றை வடிவமைத்து கின்னஸ் சாதனை படைத்துள்ளது.
சுமார் 20அடி உயரத்திற்கு உருவாக்கப்பட்டுள்ள இந்த கேன் கிறிஸ்துமஸ் மரம் 31ஆயிரம் பவுண்டு எடை கொண்டதாகும். இந்த கிறிஸ்துமஸ் மரம் தற்போது Mandaluyong பகுதியில் மக்களின் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளது.
இதனை செய்வதற்காக உபயோகப்படுத்தப்பட்ட கேன்கள் பல்வேறு தரப்பினரிடம் இருந்து அன்பளிப்பாக பெறப்பட்டவை என்று உணவு நிறுவனம் தெரிவித்துள்ளது.