சீனாவில் நிலவும் கடும் குளிர் காரணமாக சான்க்சி மாகாணத்தில் அமைந்துள்ள Hukou நீர்வீழ்ச்சி உறைந்து பனிக்கட்டியாக மாறி உள்ளது.
அங்கு பாய்கின்ற ஆறுகளில் 2வது பெரிய ஆறான மஞ்சள் ஆற்றில் இந்த நீர் வீழ்ச்சி அமைந்துள்ளது. குறுகிய பள்ளத்தாக்கில் ஆர்ப்பரித்து விழும் இந்த நீர்வீழ்ச்சியை காண ஏராளமான சுற்றுலா பயணிகள் வருவது வழக்கமாகும்.
உலகின் மிகப் பெரிய மஞ்சள் நீர்வீழ்ச்சி மட்டுமின்றி மஞ்சள் ஆறின் மிகப் பெரிய நீர் வீழ்ச்சி என்ற பெருமையும் சிறப்பும் இதற்கு உண்டு.
தற்போது இந்த நீர் வீழ்ச்சியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுவதற்கு பதிலாக உறைந்த நிலையில் மஞ்சள் நிறத்தில் பனிக்கட்டிகள் ஆங்காங்கே தொங்கி கிடப்பது தங்கத்தை உருக்கி வார்த்து தூவியது போல் உள்ளது.