பசிபிக் கடலின் மிகவும் ஆழமான பகுதியில் ஆய்வு மேற்கொண்ட பின் சீனாவிற்கு திரும்பிய நீர்மூழ்கி கப்பலை பழுது நீக்கும் பணிகள் நடைபெற்றன.
ஸ்ட்ரைவர் (Striver) என பெயரிடப்பட்டுள்ள நீர்மூழ்கிக் கப்பல், உலகின் மிக ஆழமான கடல் பகுதியான ”Mariana Trench”-இல் வாழும் உயிரினங்கள் குறித்து 48 நாட்கள் ஆய்வு மேற்கொண்டது.
கடந்த காலங்களில், சீனாவில் தயாரிக்கப்பட்ட நீர்மூழ்கி கப்பல்கள் அதிகப்பட்சமாக 23,000 அடி ஆழம் வரை சென்ற நிலையில், தற்போது முதல்முறையாக இந்த நீர் மூழ்கி கப்பல் 35,800 அடி ஆழம் சென்று ஆய்வு மேற்கொண்டது.