ஆஸ்திரேலியாவில் கடந்தாண்டு ஏற்பட்ட காட்டுத்தீயில் சிக்கி 60,000க்கும் மேற்பட்ட கோலா கரடிகள் பாதிக்கப்பட்டுள்ளதாக உலக இயற்கை நிதியம் தெரிவித்துள்ளது.
கடந்த கோடையில் ஏற்பட்ட இந்த காட்டுத்தீயால், 6 கோடி ஏக்கர் வனப்பரப்பு தீக்கிரையான நிலையில் பல்லாயிரக்கணக்கான உயிரினங்கள் பலியானதாக தெரிவிக்கப்பட்டது.
தற்போது மேற்கொள்ளப்பட்ட கணக்கெடுப்பின்படி கங்காரூ தீவு, நியூ சவுத் வேல்ஸ், விக்டோரியா பகுதிகளில் ஏற்பட்ட தீயில் சிக்கி 60,000க்கும் மேற்பட்ட கோலா கரடிகள் பலியாகியிருக்கலாம் அல்லது காயமுற்றிருக்கலாம் என தகவல் வெளியாகியுள்ளது.