உலகம் முழுவதும், சைபர்கிரைம் எனப்படும் இணையவழிக் குற்றங்களால் நடப்பு ஆண்டில் ஏற்பட்ட இழப்பு கிட்டத்தட்ட 1 லட்சம் கோடி டாலர் என மதிப்பிடப்பட்டுள்ளது.
2018ஆம் ஆண்டில் 600 பில்லியன் டாலர்களாக இருந்த இந்த அளவு, 50 சதவீதம் அதிகரித்து, நடப்பு ஆண்டில் 945 பில்லியன் டாலர்களாக அதிகரிக்கும் என்றும், இது உலக ஜிடிபியில் 1 சதவீதம் என்றும் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
சைபர்குற்றங்களில் இருந்து பாதுகாத்துக் கொள்வதற்கான செலவு இந்த ஆண்டு 145 பில்லியன் டாலர்களாக இருக்கும் என ஆன்ட்டிவைரஸ் மென்பொருள் நிறுவனமான மெக்காஃபி கூறியுள்ளது.