பாகிஸ்தானில் கொரோனா நோயாளிகளுக்கு வழங்கப்பட்ட ஆக்ஸிஜன் திடீரென துண்டிக்கப்பட்டதால் 7 பேர் உயிரிழந்தனர்.
பெஷாவர் நகரின் வடமேற்கு பகுதியில் உள்ள கைபர் டீச்சிங் மருத்துவமனையில் ஏராளமானோர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
அவர்களில் மோசமாகப் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆக்ஸிஜன் மூலம் செயற்கை சுவாசம் வழங்கப்பட்டு வந்தது. இந்நிலையில் பிராண வாயு வழங்கும் குழாயில் திடீரென அடைப்பு ஏற்பட்டதால் மூச்சுத் திணறி 7 நோயாளிகள் உயிரிழந்தனர்.