அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் பிரான்ஸ் ராணுவத்தினர் இணைந்து பிரமாண்ட போர்ப் பயிற்சி மேற்கொண்டனர். இங்கிலாந்தில் உள்ள சாலிஸ்பெரி சமவெளியில் நடந்த இந்தப் பயிற்சியில் அப்பாச்சி தாக்குதல் ஹெலிகாப்டர்கள் ஏராளமாக பங்கேற்றன.
இந்தத் தாக்குதலில் பங்கேற்ற வீரர்கள் பாராசூட் மூலம் குறிப்பிட்ட இடத்தில் குதிப்பதற்கும் தாக்குதல் நடத்தவும் பயிற்சியளிக்கப்பட்டது. அவர்களுக்குத் தேவையான ஆயுதங்கள் மற்றொரு விமானம் மூலம் வீசப்பட்டது. உலகின் எந்தப் பகுதியிலும் சென்று போரிடும் வகையில் அவர்களுக்கு பயிற்சி வழங்கப்பட்டதாக அந்நாட்டு அரசுகள் தெரிவித்துள்ளன.