சர்வதேச விண்வெளி மையத்தில் இருப்பவர்களை பூமிக்கு அழைத்து வரும் நோக்கில் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் பால்கன் ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது.
அமெரிக்காவின் புளோரிடாவில் உள்ள கென்னடி விண்வெளி மையத்தில் இருந்து புறப்பட்ட இந்த ராக்கெட்டில் வீரர்கள் திரும்புவதற்கான டிராகன் கேப்சூலும் இணைக்கப்பட்டிருந்தது.
ராக்கெட் ஏவப்பட்ட 9வது நிமிடத்தில் அதன் பூஸ்டர் தானாக தரையிறங்கியது. இந்தப் பயணம் பால்கன் 9 ராக்கெட்டின் வெற்றிகரமான 100வது பயணம் என்து குறிப்பிடத்தக்கது.