கொரோனா பெருந்தொற்று காலத்தில், இல்லங்களில் அலங்கரிக்கப்பட்டுள்ள கிறிஸ்துமஸ் மரங்கள் மற்றும் கிறிஸ்துமஸ் குடில்கள் மனதுக்கு நம்பிக்கை அளிப்பதாக போப் பிரன்சிஸ் தெரிவித்துள்ளார்.
வாடிகன் தேவாலயத்தில் உரையாற்றிய அவர், ஏசுபிரான் போதித்த நல்வழிகளைக் பின்பற்றினால் உலகமே ஒளி மையமாகும் எனவும், எந்த ஒரு பெருந்தொற்றாலும் அந்த ஒளியை அணைக்க முடியாது என தெரிவித்தார்.