சீனாவில் கடந்த ஒரு வாரமாக பனி பொழிவதால், ஷாங்சி மாகாணத்தில் உள்ள புல்வெளிகள் வெண்ணிறத்தில் காட்சியளிக்கின்றன.
பனியும் மழையும் மாறி மாறி பொழிவதால், கின்பா மலை முகடுகள் முழுவதும் வெண் பனி போர்த்தியுள்ளது.
பள்ளதாக்குகளில், 1600 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள புல்வெளிகளுக்கு, உறையும் பனியையும் பொருட்படுத்தாமல், பல்வேறு பகுதிகளில் இருந்து சுற்றுலா பயணிகள் வரத் துவங்கியுள்ளனர்.