லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் ஆலங்கட்டி மழை பெய்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.
தொடர்ந்து சில மணி நேரங்களாக பெய்த மழையால் நகர வீதிகள் வெண்மை நிற போர்வை போர்த்தியதுபோல காட்சியளித்தன. நகரின் பல சாலைகளில் வெள்ள நீர் பெருக்கெடுத்து ஓடியதால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாயினர்.
பெய்ரூட்டில் 1968ஆம் ஆண்டுக்குப் பிறகு முதல் முறையாக ஆலங்கட்டி மழை பெய்துள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.