ஆஸ்திரேலியாவின், Fraser தீவில் புதர்த்தீ வேகமாகப் பரவுவதால், பொதுமக்கள் தீவை விட்டு வெளியேறுமாறு அறிவுறுத்தப்பட்டனர்.
மழைக்காடுகளுக்கும், ஏரிகளுக்கும் பேர் பெற்ற Fraser தீவில், சுற்றுலா பயணிகள் குளிர் காய்வதற்காக மூட்டிய நெருப்பு புதர்த்தீயாக மாறியது.
7 வாரங்களாக கட்டுக்கடங்காமல் எரியும் புதர்த்தீயால், தீவில் இருந்த பாதிக்கும் மேற்பட்ட காடுகள் கருகி சாம்பலாகின.
17 விமானங்கள் மூலம் ரசாயனம் தெளித்து தீயைக் கட்டுப்படுத்தும் முயற்சியில் தீயணைப்புத் துறையினர் ஈடுபட்டுள்ளனர்.