உலக ரேலி கார் பந்தய சாம்பியன்ஷிப் தொடரில் பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த செபாஸ்டியன் ஒஜியர் 7வது முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார்.
இந்த ஆண்டுக்கான சாம்பியன்ஷிப் தொடரின் கடைசி பந்தயமான மோன்ஸா ரேலி, இத்தாலியில் நடைபெற்றது. இதில் எஸ்டோனியாவின் டனாக்கை விட 14 விநாடிகள் முன்னதாக இலக்கை அடைந்து ஒஜியர் வெற்றி பெற்றார்.
பந்தயத்தின்போது, ஒட்டுமொத்த சாம்பியன் தரவரிசையில் முதலிடத்தில் நீடித்து வந்த இவான்ஸின் கார் விபத்துக்குள்ளானதால் முதலிடத்திற்கு முன்னேறிய ஒஜியர், கடந்த 8 ஆண்டுகளில் 7வது முறையாக பட்டத்தை வென்று சாதனை படைத்துள்ளார்.