சீனாவில், வகுப்பறையில் நடனமாடிய படியே பாடங்களை நடத்தும் ஆசிரியையை, பலரும் பாராட்டி வருகின்றனர்.
Chifeng நகரில் உள்ள தொடக்க பள்ளியில், 6 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு குதிரை ஏற்றம் சம்பந்தமான பாடலை, குதிரை ஏற்ற வீரரின் பாவனைகளுடன் ஆசிரியை ”ஷி சாயி” கற்பித்தார்.
அவரைப் பின்பற்றி, மாணவர்களும், உற்சாகமாக கை கால்களை அசைத்து, சுறுசுறுப்பாக பாடங்களை ஒப்பித்தனர்.
கற்றுக்கொள்வதற்கான ஆர்வத்தை சிறார்களின் உள்ளத்தில் விதைத்தால், கடினமான பாடத்தையும் எளிதில் கற்று விடுவார்கள் என, ஆசிரியை ”ஷி சாயி” தெரிவித்துள்ளார்.