27 ஆண்டுகளுக்கு முன்னர் உறைநிலையில் வைக்கப்பட்ட கருமுட்டை மூலம் அமெரிக்காவில் பெண் ஒருவருக்கு குழந்தை பிறந்திருப்பது மருத்துவ உலகின் மாபெரும் சாதனையாக பார்க்கப்படுகிறது.
கடந்த 1992 ல் உறைநிலையில் வைக்கப்பட்ட கருமுட்டை மூலம் 29 வயதான டினா கிப்சன் என்ற பெண்மணி கடந்த அக்டோபரில் பெண் குழந்தையை பிரசவித்தார்.
24 வயதாக இருக்கும் போதும், டினா கருமுட்டை மூலம் ஒரு பெண் குழந்தையை பெற்றெடுத்துள்ளார்.
இந்த இரண்டு கருமுட்டைகளையும் டென்னிசில் உள்ள தேசிய கருமுட்டை தான மையம் வழங்கியது.
கருமுட்டை தேவையற்றவர்களிடம் இருந்து சேகரித்து கிரையோஜெனிக் குளிர்பதனம் வாயிலாக இந்த மையம் பாதுகாத்து வருகிறது.
கருமுட்டை தானம் பெற்று அதன் வாயிலாக வாரிசுகளை பெற காலம் ஒரு தடையாக இருக்காது என்பதை இந்த இரண்டு பிரசவங்களும் நீரூபித்துள்ளது.