அமெரிக்காவில் என்ஜின் பழுதானதால் சிறிய விமானம் ஒன்று தேசிய நெடுஞ்சாலையில் அவசரமாகத் தரையிறங்கியது.
மின்னசொட்டா மாகாணத்தில் ஒற்றை என்ஜின் கொண்ட சிறிய விமானம் ஒன்றில் இருவர் பயணித்துக் கொண்டிருந்தனர்.
அப்போது விமானத்தில் திடீரென கோளாறு ஏற்பட்டது.
இதையடுத்து வாகனங்கள் வேகமாகச் சென்று கொண்டிருந்த தேசிய நெடுஞ்சாலையில் விமானம் அவசரமாகத் தரையிறக்கப்பட்டது.
பின்னர் தாறுமாறாக ஓடிய விமானம் சாலைத் தடுப்பில் மோதி சேதமடைந்தது. இந்த விபத்தில் யாருக்கும் காயமேற்படவில்லை என்று கூறப்படுகிறது.