ஒவ்வொரு 3 மணி நேரத்திலும் ஒரு செயற்கைக் கோளை விண்ணில் ஏவும் முழுவதும் தானியங்கி ட்ரோன் விமானத்தை அமெரிக்க நிறுவனம் கண்டுபிடித்துள்ளது.
ராவ்ன் எக்ஸ் என்று பெயருடன், 80 அடி நீளம் கொண்ட இந்த ட்ரோன் விமானம், வானத்தில் அதி உயரத்தில் பறக்கும் திறக்கும் கொண்டது.
எனவே இதன் மூலம் செயற்கைக் கோளை நினைத்த இடத்தில் விரைவாக நிலை நிறுத்த முடியும் என அதன் தயாரிப்பு நிறுவனமான இவம் தெரிவித்துள்ளது.
ஒரு மைல் நீளம் கொண்ட எந்த ஓடுபாதையிலும் இதனை இயக்க முடியும் என்றும், கூறியுள்ள இவம் நிறுவனம் அடுத்த ஆண்டு அஸ்லோன் 45 என்ற சிறிய செயற்கைக் கோளை ஏவுவதற்கு திட்டமிட்டுள்ளது.