பிரான்சில் உள்ள விஜய் மல்லையாவின் 14 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களை அமலாக்கத்துறை பறிமுதல் செய்துள்ளது.
இந்திய வங்கிகளில் பல்லாயிரம் கோடி ரூபாய் மோசடி செய்தது தொடர்பான வழக்கில் தொழிலதிபர் விஜய் மல்லையாவின் சொத்துக்களை அமலாக்கத்துறை பறிமுதல் செய்து வருகிறது.
இதனடிப்படையில் பிரான்சின் ஃபாஷ் என்ற இடத்தில் 32 வது அவென்யூவில் உள்ள சொத்து ஒன்றைக் கண்டறிந்த அமலாக்கத்துறை அதனை முடக்கியுள்ளதாக தெரிவித்துள்ளது.
ஒன்று புள்ளி 6 மில்லியன் யூரோக்கள் அதாவது, இந்திய மதிப்பில் 14 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்தை பறிமுதல் செய்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது.