மாடர்னா கொரோனா தடுப்பு மருந்து உடலில் 3 மாதங்களுக்கு நோய் எதிர்ப்பை உருவாக்க உதவும் என்று ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
எம்ஆர்என்ஏ -1273 எனும் பெயரை கொண்ட மருந்தை, அமெரிக்காவின் மாடர்னா நிறுவனமும் அந்நாட்டின் ஒவ்வாமை மற்றும் தொற்று நோய்களுக்கான தேசிய நிறுவனமும் இணைந்து உருவாக்கியுள்ளன.
அண்மையில் கொரோனாவை அந்த மருந்து 94 சதவீதம் கட்டுபடுத்தும் திறன் கொண்டது என்று உறுதியாகியிருந்தது.
இந்நிலையில் முதல்கட்ட ஆய்வுக்கூட பரிசோதனையில் பங்கேற்ற 34 பேரிடம் இருக்கும் நோய் எதிர்ப்பு திறன் குறித்து அந்நிறுவனம் ஆய்வு நடத்தியுள்ளது.
இதில் 3 மாதங்களுக்கு நோய் எதிர்ப்பு திறனை உருவாக்க உதவும் என்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.